Tuesday, February 8, 2011

உலகமயத்தின் ஊழல்மயம் -அசோகன் முத்துசாமி



1,76,000 கோடி ஊழலுக்கும் பிரதமருக்கும் சம்பந்தமில்லை என்றார்கள். ஆம், சம்பந்தமில்லைதான். ஏனெனில் அவர் இவ்வளவு சின்னத் தொகையிலெல்லாம் கை வைக்க மாட்டார். எதுவாக இருந்தாலும் 2 லட்சம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும். அதுதான் எ° பேன்ட் °பெக்ட்ரம் ஊழல். (எ° பேன்ட் என்பது மிக உயர்ந்த வகை அதிவேக அலைக்கற்றை).
நேரடியாக மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் விண்வெளித் துறையின் கீழ் இந்திய வானியல் ஆராயச்சி நிறுவனம் (ஐஎ°ஆர்ஓ) வருகின்றது. அதன் வர்த்தகப் பிரிவு ‘ஆன்டிரிக்° காhப்பரேஷன்’ எனும் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கும்  டேவா° மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனத்திற்கும் இடையில் 2005ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்படுகின்றது. அதன்படி அந்த தனியார் நிறுவனத்திற்கு  70 எம்ஹெச் இசட் அலைக்கற்றையை வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படலாம் என்று மத்திய தணிக்கை துறை மதிப்பிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. எப்படி?
  வெறும் 15 எம்ஹெச்இசட் அலைக்கற்றை மட்டுமே 3ஜி ஏலத்தில் விற்கப்பட்டது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் சுமார் 67,719 கோடி ரூபாய். டேவ° நிறுவனத்திற்கு ஒதுக்கப்படவிருந்ததோ 70 எம்ஹெச்இசட். நான்கு மடங்குக்கும் மேல். ஆனால், வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு.
மேலும், இதே வகை அலைக்கற்றை 20 எம்ஹெச்இசட் அளவு பிஎ°என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பப்பட்டது. அதற்கு வாங்கப்பட்ட கட்டணம் வெறும் 12,847 கோடி ரூபாய்கள். மன்மோகன்சிங்கின் கொள்கைகள் எப்போதும் மக்களுக்கும், பொதுத்துறைக்கும் எதிரானவையாக இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு. மக்களின் சுருக்குப் பைகளிலிருந்து கொள்ளையடித்து முதலாளித்துவ திமிங்கிலங்களுக்கு தீனி போடுவார்.  
இந்த செய்தி தி ஹிந்து குழும நாளிதழ்களில்  வெளிவந்தவுடன் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு மறுப்பு வெளியிடப்படுகின்றது. மேற்கண்ட நிறுவனத்திற்கு எ° பேன்ட் அறைக்கற்றை ஒதுக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்ற கேள்வியே இல்லை என்பது அந்த மறுப்பின் சாராம்சம்.
ஆனால், ஒப்பந்தம் போட்டிருக்கின்றீர்களே திருவாளர் பரிசுத்தம் அவர்களே? ஏன், ஒப்பந்தம் போட்டீர்கள்? இப்படி ஒரு விவகாரம் நடந்திருப்பதே இதுநாள் வரை மக்களுக்குத் தெரியாது. இப்போது அந்த பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தவில்லை என்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கு இதே பிச்சைக் காசுக்குநாட்டின் இயற்கை வளத்தை விற்றிருப்பீர்கள் இல்லையா?விற்றிருக்க மாட்டோம் என்று நீங்கள் சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை. ஏனெனில், 2007லிருந்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. அதாவது அலைக்கற்றைகள் ஒதுக்கப்படுவதற்கு முன்பாகவே புகார்கள். ஆனால், அந்த புகார்கள் எதையும் பொருட்படுத்தாமல், நீங்கள் முடிவு செய்தபடியே அலைக்கற்றைகள் ஒதுக்கினீர்கள். எதிர்ப்பு வந்தபோதே அப்படிச் செய்த நீங்கள் விஷயமே வெளியில் தெரியாமல் இருந்திருந்தால்  இந்த ஊழலையும் செய்யாமலா இருந்திருப்பீர்கள்?
பொதுத் தணிக்கைக் குழு இந்த ஒப்பந்தத்தை இன்னும் ஆராய்ந்து கொடிருப்பதாகக் கூறுகின்றது. அது இழப்பு குறித்து இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால், வெறும் ஆயிரம் கோடிக்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்றது உண்மைதானே? அப்படி விற்க ஒப்புக் கொண்டதே ஊழல்தானே? பிஎ°என்எல்லிடமும் எம்டிஎன்எல்லிடமும் வாங்கப்பட்ட கட்டணத்தைக் கணக்கிட்டாலே  40000 கோடிக்கு மேல் வருகின்றது.
பொய்களுக்கு அளவேயில்லை. அலைக்கற்றை எதுவும் ஒதுக்கப்படவில்லை என்கிறார் பிரதமர் (அலுவலகம்). ஆனால், அந்த தனியார் நிறுவனம் தன்னுடைய அகண்ட அலை வரிசை சேவையை பாசோதித்துப் பார்ப்பதற்கு தொலைதொடர்புத் துறை அலைக்கற்றை ஒதுக்கியிருக்கின்றது. அதை இப்போது அந்த துறை திரும்பப் பெறப் போவதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, டேவ° நிறுவனத்திற்கு விற்பது என்பதை திட்டவட்டமாக முடிவு செய்து விட்டார்கள். இல்லை என்றால் எதற்கு அந்நிறுவனம் தன்னுடைய சேவையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு அலைக்கற்றை வழங்க வேண்டும்?
இந்த ஒதுக்கீட்டுக்கு முன்னர் அதற்கான பொது அறிவிப்போ, ஏலமோ, டென்டரோ விடப்படவில்லை. 2ஜி ஒதுக்கீட்டிற்கு ஏலம் விடுங்கள் என்று மன்மோகன் அமைச்சர் ராசாவுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், ராசா அதையும் மீறி தன்னிஷ்டம் போல் ஒதுக்கிடு செய்தார் என்று முதலாளித்துவ அடிவருடிகள் சிலர் எழுதி வருகின்றனர். அதாவது, பிரதமர் நல்லவர், ராசா மட்டும்தான் குற்றவாளி என்பதைப் போல. ஆனால், இந்த ஒதுக்கீட்டில் முதலில் வந்தவருக்கு முதல் உரிமை என்பது கூட கடைப்பிடிக்கப்படவில்லை. அப்படியானால் மன்மோகன் சிங்கை என்ன செய்ய வேண்டும்?
ஏன் ஏலமோ டென்டரோ விடப்படவில்லை என்கிற கேள்விக்கு இ°ரோவின் இந்நாள் தலைவர் ராதாகிருஷ்ணனும், முன்னாள் தலைவர் க°துhரி ரங்கனும், ‘2003ல் டேவ° மல்டிமீடியாவுடன் பேச்சு வார்த்தை துவங்கியபோது.......வேறு நிறுவனங்கள் எதுவும் இருக்கவில்லை’ என்று பதிலளித்திருக்கின்றனர். வேறு நிறுவனங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது பொது அறிவிப்பு வெளியிட்டால்தானே தெரியும்? அதைச் செய்யாமலேயே வேறு யாரும் இல்லை என்று முடிவிற்கு வருவது எப்படி சரியாகும்?
  இந்த ஒப்பந்தம் பற்றி பிரதமருக்கே தெரியாது என்கிறார்கள். நாங்கள் அரசாங்கத்திற்கே தெரிவிக்கவில்லை என்கிறார்கள். அவர்களது கூற்றுப்படியே இந்த விஷயம் விண்வெளி ஆணையம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தில் அமைச்சரவைச் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ராஜாங்க அமைச்சர் (இத்துறைக்கு பிரதமர்தான் காபினெட் அமைச்சர்) ஆகியோர் உறுப்பினர்கள். இணை அமைச்சருக்கும், அமைச்சரவைச் செயலாளருக்கும் தெரிந்த விஷயம் பிரதமருக்குத் தெரியாது என்றால் யாராவது நம்புவார்களா? கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொய் சொல்கிறார்கள்.
மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
“2005ல் மத்திய அமைச்சரவையும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு கட்டத்திலும் இ°ரோவுடனான எங்களது ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பின்னர்தான் செயற்கோள் மூலமாக இணையதள சேவை வழங்கும் எங்களது திட்டத்தை வளர்க்கத் துவங்கினோம்’’ என்று டேவா° நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் வி°வநாதன் ‘எகனாமிக் டைம்°’ நாளிதழுக்கு (ஆக°ட் 23, 2010) பேட்டியளித்துள்ளார். (தி ஹிந்து. 9.2.11). அப்படி எனில் பிரதமருக்குத் தெரியாது என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் அல்லவா?
ஊழல் மேல் ஊழல் நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்திய வரலாற்றில் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் போல் வேறெப்போதும் இவ்வளவு ஊழல்கள் நடந்ததில்லை. ஆனால், மன்மோகன்சிங் மீது குற்றம் ஏதுவும் இல்லை என்று சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்ட அயோக்கிய சிகாமணிகள் தொடர்ந்து பிதற்றி வருகின்றார்கள். நற்சான்றிதழ் கொடுப்பவர்களின் யோக்கியதையைப் பார்த்தாலே மன்மோகன் சிங்கின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.
இறுதியாக, 1980களில் நிதி வருவாய் தொடர்பான ஊழல்கள் வெறும் எட்டு மட்டுமே நடந்திருந்தன. மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த 1991-96 காலகட்டத்தில் மட்டும் 26 ஊழல்கள் நடந்தன. அவர் பிரதமராக இருக்கும் இந்த ஆறரை ஆண்டு காலத்தில் சிறுநாடுகளின் பட்ஜெட்டையே மிஞ்சுகின்ற அளவிற்கு ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. (சபா நக்வி, அவுட்லுக், நவம்பர் 29, 2010).
இன்னும் எத்னை ஊழல் நடந்திருக்கின்றதோ நமக்கு இப்போது தெரியாது. ஆனால், இவை அனைத்தும் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர்தான் இவ்வளவு பெரிதாகவும், இவ்வளவு அடிக்கடியும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.

-----------------------------------------9.2.11  

Monday, February 7, 2011

மார்க்ஸ், ஆசிய உற்பத்தி முறை மற்றும் இந்திய வரலாற்று ஆய்வு -இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்-தமிழில்;:அசோகன் முத்துசாமி


இந்திய வரலாற்றை ஆராய்வதற்கு மார்க்சியம் முற்றிலும் பொருத்தமற்றது என்று நிரூபிக்க முதலாளித்துவ அறிஞர்களும், தேசியவாத அரசியல்வாதிகளும் முயற்சித்தனர். அவர்களைப் பொருத்தவரை, பொருள்முதல்வாதத்தைவிட கருத்துமுதல்வாதமே இந்தியாவின் தொன்மையான கலாச்சாரத்தின் சாரமாகும்; அதே போல் சமூக வாழ்வில், இந்திய சமுதாயம் வர்க்கப் போராட்டத்தைவிட பரஸ்பர ஒத்துழைப்பால்தான் வழிநடத்தப்படுகின்றது. இதைத் தவறென்று பல மார்க்சிய அறிஞர்கள் மறுத்துள்ளனர்; எந்தவொரு சமுதாயத்திற்கும் போலவே, இந்திய சமுதாயத்தின் வளர்ச்சி குறித்த ஆய்விற்கும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பொருந்தும் என்று அவர்கள் நிரூபித்துள்ளனர்கள். இந்தியக் கலாச்சாரத்தின் கருத்துமுதல்வாதத் தோற்றத்திற்குப் பின்னால் பொருண்மை சக்திகளின் வளர்ச்சி என்கிற யதார்த்தம் இருக்கின்றது என்பதை நிரூபிக்கும் பெரிய நு£ல்கள் கணிசமாக எழுதப்பட்டுள்ளன. வரலாற்று விஞ்ஞானத்துறையின் முதலாளித்துவ அறிஞர்கள் கூட, உற்பத்திக் கருவிகளின், சாதனங்களின் வளர்ச்சியின் மூலமாகவே மனிதன் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து அநாகரீகத்திற்கும், அங்கிருந்து நாகரீகத்திற்கும் முன்னேறினான் என்பது எந்தவொரு சமுதாயத்தையும் போலவே இந்திய சமுதாயத்திற்கும் உண்மை என நிரூபித்துள்ளார்கள். தொன்மையான கிராம சமுதாயத்தில் இயற்கையாக அமையப் பெற்றுள்ள பரஸ்பர ஒத்துழைப்பு என்கிற வெளித்தோற்றத்திற்குப் பின்னால், சமூக முரண்பாடகள் வளர்ந்து கொண்டிருந்தன என்றும், அவை சுரண்டல் உறவுகள் மற்றும் அடக்குமுறையின் தோற்றத்திற்கு இட்டுச் சென்றன என்றும் அவர்கள் நிரூபித்துள்ளார்கள். ஆதலால், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களால் கூட வரலாற்று விஞ்ஞானத்தின் விதிகள் எந்தவொரு நாட்டிற்கும் போலவே இந்தியாவிற்கும் பொருந்தும் என்கிற முடிவிற்கு வருவதிலிருந்து தப்பிக்க முடியாது. எனினும், இந்திய வரலாற்றை விஞ்ஞான ரீதியாகப் புரிந்து கொள்வதில் சில பெரிய இடைவெளிகள் இருக்கின்றன. சிந்துசமவெளி நாகரீகம் எப்படி அழிக்கப்பட்டது; அந்த நாகரீகத்தில் அடிமைமுறை இருந்ததா இல்லையா; படையெடுத்த ஆரியர்களால் அந்த நாகரீகத்தின் கூறுகள் எந்த அளவிற்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டன; இன்னும் இது போன்ற கேள்விகள் இன்னும் விளக்கப்படவில்லை. காலமும், இதற்கென்றே அர்ப்பணித்துக் கொண்டுள்ள அறிஞர்களின் கடுமையான உழைப்பைக் கோரும் ஆய்வும் மட்டுமே இந்தக் கேள்விகளுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய வரலாற்று விஞ்ஞானம் எழுப்பும் கேள்விகளுக்கும் விடையளிக்க முடியும். மார்க்சிய இந்திய வரலாற்று அறிஞர்கள் குறிப்பாக ஆர்வம் செலுத்தும் ஒரு கேள்வி இருக்கின்றது. 'ஆதிப்பொதுவுடமை சமுதாயத்திலிருந்து அடிமைச் சமுதாயம், பின்னர் நிலவுடமை, பின்னர் அங்கிருந்து முதலாளித்துவம்' என்கிற சூத்திரத்திற்கு ஏற்ப இந்திய சமுதாயம் வளர்ச்சியடைந்ததா அல்லது 'ஆசிய சமுதாயம்' என்ற புகழ்பெற்ற சொல்லிற்கு ஏற்ப தனக்கே உரித்தான முறையில் வளர்ச்சி அடைந்ததா? சில அறிஞர்கள் முந்தைய முறைக்குள் இந்திய வரலாறு வளர்ச்சியை பொருத்த முயன்றனர்; மற்ற சிலர் பிந்தைய சூத்திரத்திற்கு ஏற்ப இந்திய வரலாற்றை விளக்க முயற்சித்தனர். இரு தரப்பினருமே மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரது எழுத்துக்களில் இருந்து சில பிரபலமான பத்திகளை மேற்கோள் காட்டி தங்களது நிலைப்பாடு சரி என்று வாதிட்டனர். கார்ல் மார்க்ஸ் எழுதிய 'முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாய அமைப்பு' (ஜாக் கோஹனால் மொழிபெயர்க்கப்பட்டு, எரிக் ஜே.ஹோப்ஸ்வாமால் தொகுத்து, அறிமுக உரை எழுதப்பட்ட நு£ல்; இன்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், நியூயார்க், 1985) எனும் நு£ல் இந்தப் பிரச்சனை குறித்து மேலும் தீவிரமான ஆராய்வதற்கு உதவும். அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு விமரிசனம் மற்றும் மூலதனம் ஆகிய நு£ல்களை எழுதுவதற்காக மார்க்ஸ் 1857-58 ஆண்டுகளில் மார்க்ஸ் தயாரித்த குறிப்புகளைத் தொகுத்தன் மூலம் பதிப்பாளர்கள் வரலாற்று ஆய்வுக்கு மிகப் பெரும் சேவை செய்துள்ளார்கள். இந்தக் குறிப்புகள் எழுதப்பட்ட சூழலையும், அக்குறிப்புகளின் பொருளையும் விளக்கி மார்க்சே எழுதிய தெளிவான முன்னுரையுடனும் அந்த நு£ல் வெளியிடப்பட்டது. தொகுப்பாசிரியர் சரியாகக் கூறுவதைப்போல, ஆசிரியர் (மார்க்ஸ்) தெரிவிக்க விரும்பும் கருத்தின் சரியான பொருள் என்னவென்பது எல்லா வகையிலும் தெளிவாக இருக்கின்றது; ஆனால், அவை எந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டுள்ளன என்பதையும், வெளிவந்துள்ள மற்ற படைப்புகளையும் ஒப்பிட்டுதான் அவற்றை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். என்றாலும், கிடைத்த அனைத்துத் தகவல்களையும் ஒன்றிணைத்து, அவை அநேகமாக என்ன பொருள்படக் கூடும் என்பதையும் விளக்கி ஹோப்ஸ்வாம் மதிநுட்பமிக்க பணியாற்றியுள்ளார். ஆதலால், இந்திய வரலாற்று அறிஞர்கள் மட்டுமின்றி, பொருளாதார நிபுணர்கள், சமூகவியலாளர்கள், அரசியல் விஞ்ஞானிகள், கலை இலக்கிய விமரிசகர்கள், மற்றிதரர் என இந்திய விவகாரங்களைப் பயிலும் ஒவ்வொரு மாணவரும் பொதுவாக 'ஆசியபாணி சமுதாயம்' குறித்தும், குறிப்பாக இந்திய சமுதாயம் குறித்தும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் நிறுவனர்கள் சரியாக என்ன கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இந்தத் தொகுப்பைப் படிப்பது நல்லது. அத்துடன் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் வெளிவந்துள்ள மற்ற படைப்புகளையும் படிக்க வேண்டும். தன்னுடைய மற்ற எல்லா முக்கிய படைப்புகளிலும் போலவே, மார்க்ஸ் தான் ஆராய்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ சமுதாயத்தின் தோற்றுவாயும், வளர்ச்சியுமே இக்குறிப்புகளிலும் அவரின் முதன்மையான அக்கறைக்கு உரியதாக இருந்தது. ஆசியபாணி சமுதாயம், ஜெர்மானிய சமுதாயம், ஸ்லோவானிய சமுதாயம், பண்டைய செவ்வியல் சமுதாயம் போன்றவற்றில் மார்க்ஸ் ஆர்வம் கொண்டிருந்தார். ஏனெனில், அவை அனைத்துமே முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்கள். இந்த ஒவ்வொரு வகை சமுதாயங்கள் குறித்து கிடைக்கும் அனைத்துத் தரவுகளையும் ஆராய்வதன் மூலம் மட்டுமே, முதலாளித்துவம் எப்படி மற்ற ஒவ்வொரு வகைச் சமுதாயத்தையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கொண்டு வருகின்றது என்பதை அவரால் காட்ட முடியும். "நிலத்தில் சிறுஉடமை மற்றும் கீழ்த்திசை கிராம சமுதாயத்தின் அடிப்படையிலான பொதுவுடமை ஆகிய இரண்டும் அழிக்கப்பட்டது ஆகியவை அவரது குறிப்புகளில் காணப்படும் ஆய்வுப்பொருளாகும். முதலாளித்துவத்திற்கு முந்தைய அத்தகைய சொத்துடமை மட்டுமே கூலி, உழைப்பு, மூலதனம் ஆகியவற்றிற்கான முன்நிபந்தனைகளை உருவாக்க முடியும். இந்த முன்நிபந்தனைகள் பின்வருமாறு: 1. சுதந்திர உழைப்பு; சுதந்திர உழைப்பை பணத்திற்காக பரிவர்த்தனை செய்து கொள்வது; அதை பணத்தின் மறுஉற்பத்திக்காகவும், பணத்தால் நுகரப்படும் மதிப்புகளாக அவற்றை மாற்றுவதற்காகவும் பரிவர்த்தனை செய்து கொள்வது; இதை அனுபவ பயன்மதிப்பாக அல்லாமல், பணத்தின் பயன்மதிப்பிற்காக செய்வது. 2. உழைப்பு சாதனங்கள் மற்றும் உழைப்பு செலுத்தப்படுவதற்கான கச்சாப் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து சுதந்திர உழைப்பை தனியே பிரித்து வைப்பது. இதன் பொருள் என்னவெனில், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளியின் இயற்கையான பரிசோதனைச் சாலையாகச் செயல்படும் நிலத்திலிருந்து பிரித்து வைக்கப்படுவது என்பதாகும்." (பக்: 67). ஆதலால், மார்க்ஸ் பொதுவாக 'ஆசியபாணி சமுதாயம்' என்று குறிப்பிடுவதை, அல்லது குறிப்பாக இந்திய சமுதாயம் என்றும் குறிப்பிடுவதை, எந்த நிலைமைகளில் சமுதாயம் முதலாளித்துவத்திற்கு கீழ்ப்படியும்படி செய்யப்படுகின்றது என்பது பற்றிய ஆய்விற்கு மேல் வேறு எதுவாகவும் காண்பது மார்க்சிய உள்ளுணர்விற்கு எதிரானதாகும்; முதலாளித்துவம் முன்னேறுவதன் தாக்கத்தால் எப்படி ஆசிய பாணி சமுதாயம் அல்லது குறிப்பாக இந்திய சமுதாயம் கலைக்கப்பட்டு, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிக்கு அவசியமான முன்நிபந்தனைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வு. நமது வரலாற்று வளர்ச்சியின் மொத்த போக்கையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாக இவற்றைக் காண்பதைக் காட்டிலும் அறிவியலிற்கு முரணானது வேறு எதுவும் இருக்க முடியாது. இந்திய வரலாற்றின் எந்த அம்சம் பற்றியும் தான் சுயேச்சையாக வந்தடைந்த எந்த தத்துவார்த்த அனுமானத்தையும் நிரூபிக்கவோ அல்லது மறுக்கவோ, இந்தக் குறிப்புகளைத் தனியாகவோ அல்லது மார்க்ஸ், ஏங்கெல்சின் மற்ற படைப்புகளுடனோ சேர்த்து இந்திய வரலாற்று அறிஞர்கள் யாரும் மேற்கோள் காட்டக் கூடாது. அறிவியல்பூர்வமான ஆய்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் மார்க்சியத்தில் தீர்வு இல்லை. அது அந்த ஆய்விற்கான ஒரு வழிகாட்டி மட்டுமே; உண்மைத் தரவுகளைச் சேகரிப்பதும், அவற்றை ஆராய்வதும், இடைக்கால முடிவுகளிற்கு வருவதும், மேலும் சேகரிக்கப்படும் கூடுதல் தரவுகளின் அடிப்படையில் இந்த இடைக்கால முடிவுகளை சரிபார்ப்பதும், மேலும் அப்படியே தொடர்வதும், எந்த ஒரு அறிஞருக்கும் தவிர்க்க முடியாததாகும். ஆசிய அல்லது இந்திய வரலாற்றுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மனிதகுல வரலாற்று அறிஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றது; ஏனெனில், வரலாற்றுக்கு முந்தைய ஆதிப் பொதுவுடமைச் சமுதாயங்கள் எப்படி அழிந்து, பல்வேறு வகையான வர்க்க சமுதாயங்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தன என்பது பற்றிய ஒரு பொதுவான சித்திரத்தை அக்குறிப்புகள் வழங்குகின்றன. முந்தையது குறித்து மார்க்ஸ் பின்வருமாறு கூறுகின்றார்: "ஆயர்குல வாழ்க்கை முறை, அல்லது இன்னும் பொதுவாக நாடோடி வாழ்க்கை முறையே முதல் வாழ்க்கை வடிவம் என்று நாம் கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளலாம்; இனக்குழு நிரந்தரமாக ஒரு இடத்தில் வாழாமல், ஓரிடத்தில் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர், வேறொரு இடத்திற்கு நகரும் வாழ்க்கை முறை. இயற்கையாகவே மனிதர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்வதில்லை (குரங்கைப் போல ஒரே மரத்தில் கிடைப்பதைக் கொண்டு உயிர்வாழக் கூடிய வளமான சுற்றுச்சூழல் இல்லையென்றால், காட்டு மிருகங்க¬ளைப் போல மனிதர்கள் சுற்றித்திரிவார்கள்). எனவே, இயற்கையான பொது அமைப்பான, இனக்குழு சமுதாயம் என்பது மனிதர்கள் மண்ணைச் சொந்தமாக்கி பயன்படுத்திக் கொள்ளுவதன் விளைபலன் அல்ல; ஆனால், அவ்விதம் மண்ணைக் கூட்டாகச் (தற்காலிகமாக) சொந்தமாக்கிக் கொண்டு பயன்படுத்துவதற்கான முன்நிபந்தனையாக இனக்குழு சமுதாயம் இருக்கின்றது. "மனிதர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழத் துவங்கிய பின்னர், இந்த மூல சமுதாயம் எப்படி மாற்றப்படுகின்றது என்பது, ஓரளவிற்கு பல்வேறு புற நிலைமைகளையும், தட்பவெப்ப நிலைமைகளையும், பூகோள நிலைமைகளையும், பௌதீக நிலைமைகளையும், இன்னும் அது போன்றவற்றையும் சாந்திருக்கின்றது; அத்துடன் அந்த இனக்குழுவின் தனித்துவமான பண்பையும் சார்ந்திருக்கின்றது. ரத்தம், மொழி, சடங்குகள் இன்னிதரவற்றின் பொதுவான பந்தங்கள் என தன்னிச்சையாக வளர்ச்சி பெற்ற இனக்குழு சமுதாயம்தான் வாழ்க்கையின் இலக்குகளை (எடுத்துக் காட்டாக, நிலம்-மொர்) சொந்தமாக்கிக் கொள்வதற்கான முதல் முன்நிபந்தனையாகும். மற்றும் வாழ்க்கையின் இலக்குகளை மறுஉற்பத்தி செய்யும் மேய்த்தல், வேட்டையாடுதல், விவசாயம் போன்ற செயல்பாடுகள், மற்றும் அந்த இலக்குகளுக்கு பொருள் வடிவம் கொடுக்கும் செயல்பாடுகளுக்கான முன்நிபந்தனையுமாகும். பூமி மாபெரும் சோதனைச் சாலையாகும்; உழைப்பு சாதனங்கள், உழைப்பதற்கான பொருட்கள் என இரண்டையும் அளிக்கும் ஆயுதச்சாலை; சமுதாயத்தின் அடிப்படையான இருப்பிடத்தையும் அது வழங்குகின்றது. அதனுடன் மனிதர்கள் கொண்டுள்ள உறவு கள்ளங்கபடமற்றது: அவர்கள் தங்களை அதன் பொது உடமையாளர்களாகக் கருதிக் கொள்கின்றனர்; வாழும் உழைப்பால் தன்னைத்தானே உற்பத்தியும், மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் சமுதாயத்தின் உடமையாகவும் கருதுகின்றனர். அத்தகைய சமுதாயத்தின் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒரு தனிநபர் (தனிநபர் என்கிற சொல்லின் நேரடியான அர்த்தத்திலும், உருவக அர்த்தத்திலும்) அவர் தன்னை உரிமையாளராகவோ அல்லது உடமையாளராகவோ கருதிக் கொள்கிறார். உண்மையில் உழைப்பின் மூலம் சொந்தமாக்கிக் கொள்வது இந்த முன்நிபந்தனைகளின் கீழேயே நடைபெறுகின்றது; இந்த முன்நிபந்தனைகள் உழைப்பின் உற்பத்திப் பொருளல்ல; ஆனால், அதற்கான இயற்கையான அல்லது புனிதமான முன்நிபந்தனைகளாகத் தோன்றுகின்றன." (பக்: 68-69) உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த சமுதாயத்தின் நிலைமை இதுதான். இங்கு உழைப்பாளிக்கும், உழைப்பு செலுத்தப்படுவதற்கான முன்நிபந்தனைகளின் (உதாரணமாக, நிலத்தின்-மொர்) உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இல்லை. சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஏககாலத்தில் உழைப்பாளியாகவும், நிலத்தின் உரிமையாளராகவும் இருக்கின்றார். சுரண்டுபவர் மற்றும் சுரண்டப்படுவோருக்கு இடையிலான உறவு என்று எதுவும் இல்லை. உடமையும், உழைப்பும் பொதுவானது. ஆதலால், இங்கு மனிதர்களுக்கு இடையில் முழுமையான சமத்துவம் நிலவிய ஆதிப்பொதுவுடமைச் சமுதாயம் எனும் பொற்காலம் இருந்தது. இந்த வகையான ஆதிப் பொதுவுடமைச் சமுதாயம் உடைத்து நொறுக்கப்பட்டு, புதிதாக சுரண்டல் உறவுகள் தோன்றி வளர்ந்த போதுதான், பல சமூகப் பொருளாதார அமைப்புகள் இருப்பிற்கு வந்தன. இந்த இடத்தில்தான் ஆதிப் பொதுவுடமைச் சமுதாயம் அழிந்து அதனிடத்தில் அடிமைச் சமுதாயமும், பின்னர் அதனிடத்தில் நிலவுடமைச் சமுதாயமும், பின்னர் அதனிடத்தில் முதலாளித்துவமும் வரும் என்கிற இயந்திரத்தனமான மார்க்சிய கோட்பாடு முறிந்துபோகின்றது. ஆதிப் பொதுவுடமைச் சமுதாயம் கலைந்து அதனிடத்தில் குறைந்த பட்சம் நான்கு வகைச் சமுதாயங்கள் தோன்றியிருக்கின்றன-பண்டைய செவ்வியல் சமுதாயம் (கிரேக்கம் மற்றும் ரோம்), ஜெர்மானிய சமுதாயம், ஸ்லோவானிய சமுதாயம், ஆசியபாணி சமுதாயம் ஆகிய நான்கு வகைச் சமுதாயங்கள் தோன்றியிருக்கின்றன என்று இப்போது பதிப்பிக்கப்பட்டிருக்கும் குறிப்புகளின்படி மார்க்ஸ் வெளிப்படுத்துகின்றார். இந்த நான்கு வகைகளைக் குறிப்பிடுவதனாலேயே, வேறு வகை சமுதாயங்கள் இல்லை என்று பொருளல்ல. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களின் நான்கு வகைப் பொருளாதார அமைப்புகளைப் பற்றிய உண்மைத் தரவுகள் மார்க்சிற்குக் கிடைத்திருக்கின்றன என்பதையே இது காட்டுகின்றது: "பண்டைய செவ்வியல் வரலாறு நகரங்களின் வரலாறாகும்; ஆனால், நிலவுடமை மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நகரங்கள். ஆசிய வரலாறு என்பது நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடையிலான ஒரு வகையான ஒற்றமையைக் குறிப்பதாகும் (முறையாகக் கூறினால், பெரிய நகரத்தை மன்னரின் கோட்டையாகவே, பொருளாதாரக் கட்டமைப்பின் மீது பொருத்தப்பட்ட மன்னரின் கோட்டையாகவே கருதவேண்டும்); மத்திய காலம் (ஜெர்மானிய காலகட்டம்) கிராமப்புறத்தை துவக்கப் புள்ளியாகக் கொண்ட வரலாற்று நியமப்பாதையைக் குறிக்கின்றது; அது மேற்கொண்டு வளரும் பாதை நகரம் மற்றும் கிராமத்தின் எதிர்ப்புடனாகவே செல்கின்றது; நவீன வரலாறு என்பது பண்டைய வரலாற்றைப் போல் நகரங்களை கிராமமயமாக்காமல், கிராமப்புறங்கள் நகரமயமாக்கப்படுவதைக் குறிக்கின்றது" (பக்: 77-78). ஸ்லோவனிய வகையைப் பொருத்தவரை, அதன் ரஷ்ய வகையை 'பண்டைய மாதிரியின் மிக நவீன வடிவம் என்றும், அது பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றது என்றும்' மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் (பக்: 142). 'நிலத்தில் பொதுவுடமைதான் இருந்தது; ஆனால், மேற்குலகின் சிறு விவசாயியை நினைவூட்டும் வகையில் தன்னுடைய துண்டு நிலத்தில் விவசாயம் செய்கின்றார்' என்று மார்க்ஸ் கூறுகின்றார் (பக்: 144). அதனுடன் மார்க்ஸ் பின்வருமாறு அவசியமான எச்சரிக்கையையும் விடுகின்றார்: "ஆதிப் பொதுவுடமைச் சமுதாயங்கள் ஒரே மாதிரியான ஒரு ஒற்றை வடிவில் செதுக்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு மாறாக, ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வயதிலும் வகையிலும் தங்களுக்குள் வேறுபடும் தொடர்ச்சியானதொரு சங்கிலித்தொடர்களின் வகைகளாக அவை அமையப் பெறுகின்றன; அந்த வகைகள் அனைத்தும் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களைக் குறிக்கின்றன. அவற்றில் ஒரு வகைச் சமுதாயமான ரஷ்ய சமுதாயம் பொதுவாக அனைவரும் ஏற்றுக் கொண்டதன்படி, இன்று விவசாய சமுதாயம் என்று அழைக்கப்படுகின்றது. மேற்கில் அதுபோன்றதேயான சமுதாயம், ஜெர்மானிய சமுதாயமாகும்; அது மிகச் சமீப காலகட்டத்தைச் சேர்ந்தது.... "ஆசியாவிலும், ஆப்கன்கள் மற்றும் இதரர்கள் மத்தியிலும் கிராம சமுதாயம் காணப்படுகின்றது. பண்டைய சமுதாய அமைப்புகளில் கடைசியானது என்பதால் எங்கெங்கும் அது மிக இளமையானதாக (மீகச் சமீபத்தியதாக-மொர்) இருக்கின்றது...ஆதி சமுதாய உருவாக்கத்தின் கடைசி கட்டம் என்கின்ற வகையில், விவசாய சமுதாயம் இரண்டாவது வகை சமுதாய உருவாக்கத்திற்கு மாறிச் செல்லும் காலகட்டத்திலும் இருக்கின்றது. அதாவது, பொதுவுடமையை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்திலிருந்து தனிச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயமாக மாறுகின்றது. இரண்டாம் கட்ட சமுதாய உருவாக்கம் என்பது தொடர்ச்சியான ஆண்டான்-அடிமை சமுதாயங்களைக் கொண்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்". (பக்:144-45) ஆதலால், 'அடிமைச் சமுதாயம்-நிலப்பிரபுத்துவ சமுதாயம்-முதலாளித்துவம்' அல்லது 'ஆசியபாணி சமுதாயம்-முதலாளித்துவம்' என்கின்ற இரண்டு சூத்திரங்களில் ஏதேனும் ஒன்றை இந்திய வரலாறு குறித்த மார்க்சியப் புரிதலின் ஆரம்பமும், முடிவுமாகக் காண்பதைவிடவும் மார்க்சியமல்லாத செயல் வேறொன்று இருக்க முடியாது. இந்திய வரலாற்றைப் பயிலும் மார்க்சிய மாணவர் எவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டிய உண்மைத் தரவுகளின் சிரத்தையான ஆய்வுக்கு இத்தகைய சூத்திரங்களில் ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்வது ஈடாகாது. என்றபோதும், பொதுவாக ஆசியபாணி சமுதாயத்தின் வளர்ச்சி பற்றியும், குறிப்பாக இந்திய சமுதாயத்தின் வளர்ச்சி பற்றியும் போதுமான அளவு உள்ளொளியை இக்குறிப்புகள் அளிக்கின்றன. 'ஆதலால், கீழ்த்திசை எதேச்சதிகாரம் சொத்து என்பது சட்டப்படியாக இல்லாத நிலைக்கு இட்டுச் செல்வது போல் தோன்றுகின்றது. என்றாலும், உண்மையில் அது இனக்குழு அல்லது பொதுவுடமையின் அடிப்படையிலானது. பெரும்பாலான உதாரணங்களில் அந்த சிறு சதாயத்திற்குள்ளேயே பொருளுற்பத்தி மற்றும் விவசாயம் ஆகியவற்றின் ஒரு வகையான இணைப்பால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவ்விதம் அந்தச் சமுதாயம் தன்னிறைவு பெற்றதாக ஆகின்றது; தன்னுள்ளேயே உற்பத்திக்கும், உபரி உற்பத்திக்கும் தேவையான நிலைமைகளைக் கொண்டிருக்கின்றது.' 'உபரி உழைப்பின் ஒரு பகுதி இறுதியில் ஒரு தனிநபராகத் தோன்றும் உயர்ந்த சமுதாயத்திற்கு உரியது. இந்த உபரி உழைப்பு ஒரு காணிக்கையாகவும், ஒற்றுமையின் மகிமைக்கான பொது உழைப்பாகவும் செலுத்தப்படுகின்றது. ஒரு பகுதி எதேச்சதிகார அரசனுக்கும், ஒரு பகுதி கடவுளின் இனக்குழு உருவமாகக் கற்பனை செய்து கொள்ளப்பட்டவருக்குமாக செலுத்தப்படுகின்றது.' (பக்:70) கீழ்த்திசை நாடுகளில் இருந்த அடிமைமுறையையும், அய்ரோப்பாவில் இருந்த அடிமைமுறையையும் மார்க்ஸ் ஒப்பிடுவது கவனிக்க வேண்டியதும், முக்கியமானதும் ஆகும். "ஆதலால், சொத்து (அதன் ஆசிய, ஸ்லோவானிய, பண்டைய செவ்வியல், ஜெர்மானிய வடிவில்) என்பது முதலில் உற்பத்தி செய்பவருக்கும் (அல்லது தன்னைத் தானே மறுஉற்பத்தி செய்து கொள்பவருக்கும்), அவரது உற்பத்தி அல்லது அவரது மறுஉற்பத்தி நிலைமைகளிற்கும் இடையிலான உறவைக் குறிக்கின்றது. எனவே, உற்பத்தி நிலைமைகளிற்கு ஏற்ப சொத்து வெவ்வேறு வடிவங்கள் எடுக்கும். உற்பத்தியின் நோக்கமே உற்பத்தியாளரை அவரை வாழ்வதற்கான இந்தப் புறச்சூழ்நிலைமைகளுடன் மறுஉற்பத்தி செய்வதே....ஆண்டான்-அடிமைச் சமுதாயம் போன்றவற்றில் உழைப்பாளியே ஒரு மூன்றாவது நபருக்கோ அல்லது சமுதாயத்திற்கோ இயற்கையான உற்பத்தி நிலைமைகளில் ஒன்றாகக் காட்சியளிக்கின்றார்; ஆதலால் சொத்து என்பது சுயேச்சையாக உழைக்கும் தனிநபருக்கும், உழைப்பு செலுத்தப்படுவதற்கான ஸ்து£லமான நிலைமைகளுக்கும் இடையிலான உறவாக இனியும் இருப்பதில்லை. ஆதலால், அடிமை முறை என்பது எப்போதுமே இரண்டாம்பட்சமானதுதான், முதன்மையானது அல்ல; சமுதாயத்தையும், அதிலுள்ள உழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட சொத்தின் அவசியமான, இயல்பான விளைவாக அது இருந்தபோதும். (அடிமைமுறையின் இந்தப் பண்பு கீழ்த்திசையின் பொதுவான அடிமைமுறைக்குப் பொருந்தாது. ஆதலால், அடிமைமுறை அய்ரோப்பிய கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பரிசீலிக்கப்படுகின்றது). (பக்:95) எனவே, அய்ரோப்பிய நாடுகளைப் போலவே இந்தியாவும் ஆதிப்பொதுவுடமைச் சமுதாயத்திலிருந்து அடிமைமுறைக்கு வளர்ச்சி அடைந்தது என்று நிரூபிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தவறானவை என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகின்றார். கீழ்த்திசை நாடுகளில் எந்த வகையான அடிமைமுறை வளர்ச்சி அடைந்திருந்தாலும் அது பண்டைய கிரேக்கத்திலும், ரோமிலும் வளர்ந்திருந்த அடிமைமுறைகளிலிருந்து மாறுபட்டது. மேலும், மேற்காசியாவில் வளர்ந்திருந்த அடிமைமுறை மாதிரி கூட இந்தியாவில் வளர்ந்திருக்கவில்லை; இந்தியாவில் சமுதாய வளர்ச்சி முற்றிலும் வேறான ஒரு பாதையை மேற்கொண்டது. கீழ்த்திசை நாடுகளின், அய்ரோப்பிய நாடுகளின் அடிமைமுறைகள் பற்றிய மார்க்சின் குறிப்புகள், ஆதிப்பொதுவுடமைச் சமுதாயங்கள் உடைந்து நொறுங்கி வர்க்க சமுதாயங்கள் தோன்றி எழுந்த வெவ்வேறு வழிவகைகளைப் பற்றிய ஒரு உள்ளொளிக்கு மேல் வேறு எதையும் கொடுக்கவில்லை. ஆதிப்பொதுவுடமைச் சமுதாயத்திற்குள்ளேயே சமூகச் சொத்து-அரசுச் சொத்து மற்றும் தனிச்சொத்து இரண்டும்-வளர்ச்சி அடைந்த பல்வேறு வழிவகைகளைப் பற்றியும், அவற்றின் வளர்ச்சி எப்படி சமூகச் சொத்தின் அழிவிற்கு இட்டுச் சென்றது என்பதை விவாதிக்கும் மார்க்ஸ் பின்வருமாறு கூறுகின்றார். "ஆசிய வடிவம்தான் மிகப் பிடிவாதமாக, நீண்ட காலமாக நீடித்திருந்த வடிவமாகும். தன்னைத்தானே ஆதரித்துக் கொள்ளும் உற்பத்தி சுழற்சி, விவசாயம் மற்றும் கைவினைப் பொருளுற்பத்திகளுக்கிடையிலான ஒற்றுமை போன்றிதரவற்றால் தனிநபர் சமுதாயத்திலிருந்து சுயேச்சையானவராக ஆகமுடியாது என்கின்ற அடிப்படைக் கோட்பாட்டை ஆசிய வடிவம் ஆதாரமாகக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். சமுதாயத்துடனும், அதன் பொருளாதார முதநிலையுடனும் தனக்குள்ள உறவை தனிநபர் மாற்றிக் கொள்வாரென்றால், அதற்கு எதிரிடையாக இந்தப் பொருளாதார முதநிலையும் அதன் சொந்த இயக்க விதிகள் மற்றும் தரித்திரமாக்கப்படுதல் போன்றவற்றால் திருத்தமடையும்." (பக்.83) ஆசியாவில் ஏன் இந்த 'பிடிவாதமான, நீண்ட காலம் நீடித்திருப்பது' நிகழ்கின்றது? அநேகமாக சாதி ஒரு குறிப்பான முக்கியத்துவம் மிக்க பாத்திரம் வகித்துள்ள இந்தியா தொடர்பான ஒரு குறிப்பு அளிக்கப்படுகின்றது. மார்க்ஸ் அது பற்றி பின்வருமாறு கூறுகின்றார்: "பண்டைய அரசின் இனக்குழுக்கள் இரண்டு வகைகளில் அமையப் பெற்றிருந்தன; ரத்த உறவு அல்லது வசிப்பிட அடிப்படையில். ரத்த உறவு இனக்குழுக்கள் வரலாற்று ரீதியாக வசிப்பிட இனக்குழுக்களுக்கு முந்தையவை. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் அவர்களால் இடம் பெயர்க்கப்பட்டவை. ரத்த உறவு இனக்குழுக்களின் மிகத் தீவிரமான, இறுகிப்போன நிறுவன வடிவம் சாதியமைப்பாகும்; ஒன்றிலிருந்து மற்றொன்று தனியாகப் பிரிக்கப்பட்ட, ஒன்றுடன் மற்றொன்று திருமண உறவு கொள்ளும் உரிமையற்ற, முற்றிலும் வெவ்வேறான சமூகநிலையுடன், ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமானதும் மாற்றமுடியாததுமான தொழிலுடன் பிரித்துவைக்கப்பட்டுள்ள சாதிகள்." (பக்: 76-77) மீண்டும், "ஆதிச் சொத்துடமை சக்திகள், உற்பத்தியைத் தகவமைக்கும் வெவ்வேறு ஸ்து£லமான கூறுகளுக்கும் சொத்துக்கும் இடையிலான உறவாக தவிர்க்க முடியாத வகையில் கரைந்து போகின்றன; வெவ்வேறு சமுதாய வடிவங்களின் பொருளாதார அடித்தளமாகும் அவை. அதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட சமுதாய வடிவங்களை அவை முன் தீர்மானிக்கின்றன. ஆண்டான்-அடிமைச் சமுதாயங்களில் உள்ளது போல உழைப்பே ஸ்து£லமான உற்பத்தி நிலைமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டவுடன் இந்த வடிவங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றமடைகின்றன. இதன் விளைவாக நிலத்தில் உள்ள சொத்துடமையில் அடங்கியுள்ள அனைத்து சொத்துடமை வடிவங்களின் எளிமையான நேரிடைப் பண்பு மறைகின்றது; ஆதலால் அவையே ஒழிந்துபோகின்றன. உற்பத்தி சாதனங்களில் உள்ள சொத்துடமையைப் பொருத்தவரையில், கைவினை நுட்பத் தேர்ச்சி படைத்த குறிப்பிட்ட வகையான உழைப்பும், அதன் காரணமாக உழைப்பு சாதனத்தில் உள்ள சொத்தும், உற்பத்தி நிலைமைகளில் உள்ள சொத்துக்கு இணையாகின்றன; இது ஏற்கத்தக்க வகையில் ஆண்டான்-அடிமைமுறையை விலக்கிவைக்கிறது (அல்லது அடிமைமுறையில் இது இருக்காது-மொர்). என்றபோதும், அது அதனையொத்த எதிர்மறையான வளர்ச்சிக்கு சாதி அமைப்பின் வடிவில் இட்டுச் செல்லக் கூடும். (பக்: 101-102). ரத்த உறவு இனக்குழுக்கள் இறுகிய சாதிகளாக பரிணமிப்பது, இரண்டு வகை சொத்துகளுக்கு (நிலச் சொத்து, உற்பத்திக் கருவிகளில் உள்ள சொத்து-மொர்) இணையான எதிர்மறை வளர்ச்சிக்கும், நீண்டகாலம் மிகப் பிடிவாதமாக நீடித்திருக்கும் சமூகப் பொருளாதார அமைப்பின் தோற்றத்திற்கும் இறுதியில் அது இட்டுச் செல்வது, (அந்த அமைப்பு எந்தச் சோதனையையும் மிகப்பெருமளவு தடுக்கின்றது) ஆகியவையே இந்திய சமுதாயத்தின் கூறுகளாகும்; இவை பற்றி மார்க்ஸ் நமக்கு ஒரு சில குறிப்புகள் மட்டுமே கொடுக்கின்றார். எனினும், இந்திய வரலாற்று மாணவர்களும், அறிஞர்களும் இவற்றை எடுத்து இருக்கின்ற உண்மைத் தரவுகளின் ஒளியில் அவை சரியாக இருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்து பார்க்கும் அளவு முக்கியத்துவம் மிக்கவை. இது குறித்து, சிபிஐ(எம்) கட்சியின் திட்டம் பின்வருமாறு சுட்டிக் காட்டியுள்ளது: "இந்திய சமுதாயம் முதலாளித்துவப் பாதையில் வளர்ந்து கொண்டிருந்தபோதும், அதனுள் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் பலமான கூறுகளை இன்னும் கொண்டுள்ளது. முதலாளிகளால் அழிக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களின் சாம்பலின் மீது வளர்ந்த முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் போலல்லாது, இந்தியாவில் முதலாளித்துவம் அதற்கு முந்தைய சமுதாயத்தின் மேலே அப்படியே பொருத்தப்பட்டது. ஒரு நு£ற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோ அல்லது 1947ல் அதிகாரத்தைப் பெற்ற இந்திய முதலாளிகளோ, முதலாளித்துவ சமுதாயத்தின் தடையற்ற வளர்ச்சிக்கும், பின்னர் அது பொதுவுடமைச் சமுதாயத்தால் நீக்கப்படுவதற்கும் இன்றியமையாத செயலான முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களிற்கு மரண அடி கொடுக்கும் வேலையைச் செய்யவில்லை. ஆதலால், இன்றைய இந்திய சமுதாயமானது, ஏகபோக முதலாளித்துவம் சாதி, மத, இனக்குழு நிறுவனங்களுடன் இணைந்திருக்கும் ஒரு விசித்திரமான கலவையாகும். இவ்வாறாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் அழிவில் நாட்டம் கொண்ட முற்போக்கு சக்திகளை ஒன்றுபடுத்தும் கடமையும், ஜனநாயகப் புரட்சியை மிக விரைவாக பூர்த்தி செய்வதற்காக அதற்குள்ளேயே இருக்கின்ற புரட்சிகர சக்திகளை உறுதிப்படுத்தும் கடமையும், சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதற்காக தளத்தைத் தயார்படுத்தும் கடமையும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும், அதன் கட்சியின் மீதும் விழுந்துள்ளது." (பத்தி 35). இந்திய வரலாறு குறித்து மிக வேகமாகக் கிடைத்து வரும் உண்மைத்தரவுகளை அறிவியல் ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தி, மிகத் தொன்மையான காலத்திலிருந்து தற்காலம் வரையிலுமான இந்திய வரலாற்றை மறுகட்டமைக்க முயற்சிப்பதன் மூலம் இந்திய சமுதாயத்தில் 'நீண்ட காலம் மிகப் பிடிவாதமாக நீடித்திருக்கும்' முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாய அமைப்பு குறித்த மார்க்சின் புரிதலைச் செழுமைப்படுத்துவதும் மார்க்சிய இந்திய வரலாற்று ஆய்வாளர்களின் கடமையாகின்றது. ---------------------------------